/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணசாமி கல்லுாரியில் பொங்கல் விழா
/
கிருஷ்ணசாமி கல்லுாரியில் பொங்கல் விழா
ADDED : ஜன 14, 2024 03:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது.
கல்லுாரி தாளாளர் ராஜேந்திரன், செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினர்.
சுற்றுப்புற சூழலை பாதுகாப்போம், பெண் கல்வியின் முக்கியத்துவம், பாலியல் வன்கொடுமை தடுப்பு, தேசிய பறவை மற்றும் விவசாயம் காப்போம் போன்ற தலைப்புகளில் கோலப்போட்டி நடந்தது.
சிறந்த கோலமிட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முதுகலை கம்ப்யூட்டர் பயன்பாட்டியல் துறைத் தலைவர் விஜயலட்சுமி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

