/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பதிவுத்துறை அலுவலகம் சிதம்பரத்தில் இடமாற்றம்
/
பதிவுத்துறை அலுவலகம் சிதம்பரத்தில் இடமாற்றம்
ADDED : ஜன 23, 2024 05:10 AM
சிதம்பரம் : சிதம்பரம் பதிவுத்துறை அலுவலக கட்டடம் தற்காலிமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் லால்கான் தெருவில் இயங்கி வந்த பதிவுத்துறை அலுவலக கட்டடம் கடந்த 1870ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இங்கு, 1905 ம் ஆண்டு முதல் பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டது.
கட்டடம் பழுதானதால், மழைக் காலங்களில் ஆவணங்களை பாதுகாப்பதிலும், பத்திரப் பதிவு மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. இதானல் பதிவாளர் அலுவலகத்தை தற்காலிக இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சிதம்பரம் புறவழி சாலையில் பைசல் மகால் திருமண மண்டபம் அருகில் உள்ள தனியார் கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக கடந்த ஒரு வார காலமாக, அலுவலக ஆவணங்கள், மேஜை, நாற்காலி, கணினிகள் என அனைத்து தளவாடப் பொருட்களும் வாகனங்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்டது.
ஆனால், இடமாற்றம் குறித்து பொதுமக்களுக்கு எவ்வித, முன் அறிவிப்பும் இல்லாமல், புதிய இடத்திற்கு பதிவுத்துறை அலுவலகத்தை மாற்றியுள்ளனர். இதனால் பொதுமக்கள் பலர், பழைய இடத்திற்கு சென்று, அங்கு அலுவலகம் இல்லாதது, அறிந்த பின்பு, புதிய இடத்திற்கு செல்லும் அலைகழிப்பிற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

