/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மரங்களை வெட்ட தடை விதிக்க கோரிக்கை
/
மரங்களை வெட்ட தடை விதிக்க கோரிக்கை
ADDED : ஜன 23, 2024 05:54 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு பள்ளியில் மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும் என, ஆர்.டி.ஓ.,விடம் கோரிக்கை வைக்கப் பட்டது.
விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தனவேல் தலைமையில், அ.தி.மு.க., தங்கராசு, தே.மு.தி.க., நகர செயலாளர் ராஜ்குமார், நாம் தமிழர் கட்சி கதிர்காமன், பகுஜன் சமாஜ் கட்சி அருள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், விருத்தாசலம் ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூதிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டடம் கட்டும் பணிக்காக பழமை வாய்ந்த மரங்களை வெட்ட அனுமதிக்க கூடாது.
உடனடியாக மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும். வெட்டப்பட்ட மரத்திற்கு பதிலாக கூடுதல் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் உள்ள மரங்களை அனுமதி இன்றி வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ., உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

