/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடியிருப்போர் நலச்சங்கம் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
குடியிருப்போர் நலச்சங்கம் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 23, 2024 10:21 PM

கடலுார் : கடலுார் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்புசார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பு தலைவர் பாலு பச்சையப்பன் தலைமை தாங்கினார்.
சிறப்பு தலைவர் மருதவாணன், ஆலோசகர்கள் கிருஷ்ணமூர்த்தி, சிவராமன், புருஷோத்தமன், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
இணை பொதுச்செயலாளர் தேவநாதன் வரவேற்றார். மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிவேல் துவக்கவுரையாற்றினார். பொதுச் செயலாளர் வெங்கடேசன் விளக்கவுரை ஆற்றினார்.
இதில், தமிழக அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள மின் உபயோகிப்பாளருக்கு பாதகமாக அமைந்திடும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.
கொண்டங்கி ஏரி, பசுமை தீர்ப்பாயத்தால் பாதிக்கப்பட்ட நீர் நிலையாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை சுற்றி பஸ் நிலையம், அடுக்குமாடி கட்டடம் உட்பட எந்த கட்டுமானங்களும் உருவாக்கக்கூடாது.
கடலுார் மாநகரில் மாவட்டத்திற்கான மருத்துவக்கல்லுாரி அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஒருங்கிணைப் பாளர் ரமேஷ்பாபு நிறைவுறை ஆற்றினார்.
பொருளாளர் ரமணி நன்றி கூறினார்.

