/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பட்டா மாற்றத்தில் கல்லா கட்டும் வருவாய் அதிகாரிகள்
/
பட்டா மாற்றத்தில் கல்லா கட்டும் வருவாய் அதிகாரிகள்
பட்டா மாற்றத்தில் கல்லா கட்டும் வருவாய் அதிகாரிகள்
பட்டா மாற்றத்தில் கல்லா கட்டும் வருவாய் அதிகாரிகள்
ADDED : ஜன 23, 2024 11:14 PM
கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் உள்ள தாலுகாவில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள், பட்டா மாற்றத்தில் குளறுபடிகள் செய்து, கல்லா கட்டுவது அதிகரித்துள்ளது.
இங்கு, ஒருவருக்கும் சொந்தமான நிலத்தில், மற்றொருவர் பெயரை கூட்டாக சேர்ப்பது, ஒருவருடைய நிலத்தை வேறொருவின் பெயருக்கே பட்டாமாற்றம் செய்வது, அளவையில் குளறுபடி என இந்த தாலுகா அலுவலகத்தில் பல்வேறு குளறுபடிகள் நடக்கிறது. அதிகாரிகள் செய்யும் தவறால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு, அதை திருத்தம் செய்வதற்காக வருவாய்த்துறை அதிகாரிகளை அணுகினால், அவர்களிடம் குறிப்பிட்ட தொகையை கறந்து விடுகின்றனர்.
காரியம் ஆனால் போதும் என விவசாயிகளும் புகார் செய்யாமல் இருந்து விடுகின்றர். உயர்அதிகாரிகளும் இதை கண்டுகொள்ளாததால், விவசாயிகள் பாதிப்பு தொடர்கிறது.