ADDED : ஜன 19, 2024 08:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: காணும் பொங்கலை முன்னிட்டு, விருத்தாசலம் மணிமுக்தாற்றில் ஆண்டுதோறும் ஆற்று திருவிழா நடக்கும். இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று திருவிழாவை கொண்டாடினர்.
விருத்தாசலத்தில் நேற்று முன்தினம் காணும் பொங்கலையொட்டி, மணிமுக்தாற்றில் நடந்த ஆற்று திருவிழாவில், விருத்தாசலம் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள மக்கள் பெரியர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆயிரகணக்கானோர் குடும்பத்துடன் கூடி ஆற்றுமணலில் விளையாடி மகிழ்ந்தனர்.
மேலும், சிறுவர்கள் விளையாடி மகிழ ராட்டினம், ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில், சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க விருத்தாசலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

