/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாய் கிரிக்கெட் கிளப் அணி மாவட்ட அளவில் முதலிடம்
/
சாய் கிரிக்கெட் கிளப் அணி மாவட்ட அளவில் முதலிடம்
ADDED : ஜன 23, 2024 05:14 AM

கடலுார் : கடலுாரில் நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் சாய் கிரிக்கெட் கிளப் அணி முதலிடம் பிடித்தது.
கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட கிரிக்கெட் சங்க பதிவு அணிகளுக்கான மாவட்ட அளவில் கிரிக்கெட் போட்டி அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. கடலுார், நெல்லிக்குப்பம், பண்ருட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 16 அணிகள் பங்கேற்றது.
போட்டியில், கடலுார் சாய் கிரிக்கெட் கிளப் அணி முதலிடம், கடலுார் லவ் ஸ்டார் அணி இரண்டாமிடம் பிடித்தது. பரிசளிப்பு விழாவில், மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் பசுபதி, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தாஜூதீன், மகேந்திரன், பயிற்சியாளர் ஆனந்த்பாபு பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை சங்க செயலாளர் கூத்தரசன் செய்திருந்தார்.

