/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜவகர் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா
/
ஜவகர் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 14, 2024 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி : நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லுாரியில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
என்.எல்.சி., நிலக்கரி சுரங்கங்களின் மனிதவளத் துறை துணை பொது மேலாளர் ஓ.எஸ்.அறிவு தலைமை தாங்கினார். கல்லுாரி செயலர் ராஜ்மோகன் விழாவை துவக்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து அனைத்து துறை மாணவ, மாணவிகளின் பாரம்பரிய கலைகளான சிலம்பம், கரகாட்டம், கும்மி பாட்டு, வாள் வீச்சு ஆகியன நடந்தது.
விழாவில் நெய்வேலி ஜவகர் கல்வி குழுமத்தின் உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

