ADDED : பிப் 02, 2024 12:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று அதிகாலை இடம்கொண்டான்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது உரிய அனுமதியின்றி மாட்டுவண்டிகளில் சிலர் மணல் கடத்தியது தெரியவந்தது.
மணல் கடத்திய தங்களிக்குப்பத்தை சேர்ந்த ஆனந்த், 32, அன்பரசன், 28, அன்பழகன், விஜயகுமார், 45, அருள், 34, கிருஷ்ணமூர்த்தி, 45, ஆகிய, 6 பேரை கைது செய்தனர். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

