நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே பள்ளி மாணவன் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
பரங்கிப்பேட்டை அடுத்த அருண்மொழிதேவன் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது, மகன் கலைமணி, 17; பு.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.
கலைமணி படிக்காமல் அதிக நேரம் செல்போனில் செலவிடுவதை இவரது தாய் கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த கலைமணி நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

