ADDED : பிப் 02, 2024 12:07 AM
திட்டக்குடி: ராமநத்தம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார், லாரி ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார், நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆலத்துார் கிராமம் அருகே வெள்ளாற்றில் சட்டவிரோதமாக ஈச்சர் லாரியில் சிலர் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்ததும் ஒருவர் தப்பியோட, ஒருவர் சிக்கினார்.
விசாரணையில் லாரி டிரைவர் பெரம்பலுார் மாவட்டம், திருவாலந்துறை கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன்,20, என்பதும், தப்பியோடியவர் பெரம்பலுார் மாவட்டம், தொண்டம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பதும் தெரிந்தது.
மணல் திருட்டில் ஈடுபட்ட தமிழரசனைக்கைது செய்த போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர். ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய ராமலிங்கத்தை தேடி வருகின்றனர்.

