/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூத்த குடிமக்கள் நல கூட்டமைப்பு ஆண்டு விழா
/
மூத்த குடிமக்கள் நல கூட்டமைப்பு ஆண்டு விழா
ADDED : ஜன 10, 2024 01:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் மூத்த குடிமக்கள் நல கூட்டமைப்பு ஆண்டு விழா நடந்தது.
கூட்டமைப்பு தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் சேகர் வரவேற்றார். ஹெல்ப்ஏஜ் இந்தியா துணை இயக்குனர் சத்தியபாபு துவக்கவுரையாற்றினார். கூட்டமைப்பு பொருளாளர் கருணாநிதி ஆண்டு வரவு, செலவு கணக்குகளை வாசித்தார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் ஆர்.எம்.,மஹாவீர் ஜுவல்லரி விஜயகுமார் சிறப்புரையாற்றினர்.
கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், கூட்டமைப்பு துணை செயலாளர் தர்மராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

