/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காராமணிக்குப்பத்தில் இன்று சிறப்பு சந்தை
/
காராமணிக்குப்பத்தில் இன்று சிறப்பு சந்தை
ADDED : ஜன 14, 2024 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : காராமணிக்குப்பத்தில், பொங்கலை முன்னிட்டு இன்று சிறப்பு சந்தை நடக்கிறது.
நெல்லிக்குப்பம் அருகே காராமணிக்குப்பத்தில் திங்கள் கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது.
கருவாடு, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இங்கு கிடைப்பதால் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் நலனுக்காக இன்று (14ம் தேதி) சிறப்பு சந்தை நடக்கிறது.
இங்கு, காய்கறி கடைகள் மட்டுமின்றி, பொங்கலுக்கு தேவையான கரும்பு, மாட்டு பொங்கலுக்கு தேவையான மாடுகளை அலங்கரிக்கும் கயிறுகள், சலங்கைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

