/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
/
சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : ஜன 23, 2024 10:29 PM
கடலுார் : அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷ கத்தையொட்டி கடலுார் சக்தி விநாயகர் கோவிலில் ராமருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி தமிழக கோவில்களில் சிறப்பு பூஜை நடத்த பா.ஜ., தலைமை அறிவித்தது.
அதன்படி, கடலுார், செம்மண்டலம் சேகர் நகர் சக்தி விநாயகர் கோவிலில் ராமருக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடந்தது.
இதில், பா.ஜ., மாநகரத் தலைவர் வேலு வெங்க டேசன் தலைமையில், தங்கதுரை, கிஷோர், ஏழுமலை, முருகன், வக்கீல் செந்தில், பாலு உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக, கடலுார் செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. ராம பஜனை பாடல்கள் பாடப்பட்டன.

