ADDED : ஜன 23, 2024 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : ராமர் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி, நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் கோதண்டராமர் கோவிலில் நேற்று காலை முதல் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ராமரை போற்றி பஜனை செய்தனர்.
அய்யோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. அதையொட்டி, நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அந்த வகையில் நெல்லிக்குப்பத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
பா.ஜ., செயலாளர் கிருபாகரன், துணைத் தலைவர் வேலாயுதம், மாநில பட்டியலணி பொதுச் செயலாளர் ரங்கேஷ், ஆன்மிக பிரிவு நகர தலைவர் ராஜசேகரன், சேவாபாரதி பிரிவு அம்சா பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

