ADDED : ஜன 21, 2024 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
கடலுார் கூத்தப்பாக்கத்தில் இளைஞரணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
இதில், வெற்றி பெற்றவர்களுக்கு கடலுார் மண்டலம் மற்றும் கடலுார் கிழக்கு மாவட்ட கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
மண்டல செயலாளர் மற்றும் குறை தீர்ப்பாய குழு மாநில இணை செயலாளர் ஜெயராமன், துணைத் தலைவர்கள் முருகேசன், கணேசமூர்த்தி, கிழக்கு மாவட்ட பொருளாளர் குமார், துணைத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் பரிசு வழங்கி பேசினர்.

