/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு எல்லையில் வரவேற்பு
/
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு எல்லையில் வரவேற்பு
ADDED : மார் 28, 2025 05:30 AM

ஸ்ரீமுஷ்ணம்; கிள்ளை சமுத்திர தீர்த்தவாரிக்கு சென்று ஸ்ரீமுஷ்ணம் திரும்பிய பூவராகசுவாமிக்கு ஊர் எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் மாசி மக உற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் பூவராகசுவாமி கிள்ளை கடற்கரையில் நடக்கும் சமுத்திர தீர்த்தவாரி உற்சவத்திற்கு கடந்த 13ம் தேதி புறப்பட்டு சென்றார்.
14ம் தேதி தீர்த்தவாரி முடிந்து பல்வேறுகிராமங்கள் வழியாக வலம் வந்து நேற்று முன்தினம் இரவு ஸ்ரீமுஷ்ணம் எல்லைக்கு வருகை தந்தார்.
எம்.ஜி.ஆர்., நகர் பகுதி யில்பேரூராட்சி சார்பில் மங்கல இசை முழங்க வான வேடிக்கையுடன் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தி.மு.க., ஒன்றியசெயலாளர் தங்க ஆனந்தன், பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன், தி.மு.க நகர செயலாளர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பூமாலை சண்முகம் தலைமையில் தெற்கு வினாயகர் கோவில் முன்புறம் நாட்டிய குதிரைகள், அலங்கரிக்கப்பட்ட யானை, மங்கல வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
உற்சவ மூர்த்தி யக்ஞவராகன் ஸ்ரீதேவி பூதேவியோடு பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள்சுவாமி தரிசனம் செய்தனர்.