/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விற்பனைக்கு மூட்டை கட்டிய அலுவலக பைல்கள் தாசில்தார் அதிர்ச்சி
/
விற்பனைக்கு மூட்டை கட்டிய அலுவலக பைல்கள் தாசில்தார் அதிர்ச்சி
விற்பனைக்கு மூட்டை கட்டிய அலுவலக பைல்கள் தாசில்தார் அதிர்ச்சி
விற்பனைக்கு மூட்டை கட்டிய அலுவலக பைல்கள் தாசில்தார் அதிர்ச்சி
ADDED : மார் 26, 2025 05:03 AM
கடலுார் தாலுகா அலுவலகத்தில் பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்ட பைல் பேப்பர்கள் பதிவு அறையில் சேமிக்கப்பட்டு வருவது வழக்கம். தற்போது அனைத்து பைல்களும் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்படுவதால் பைல் காப்பி பாதுகாத்து வைப்பது குறைந்து வருகிறது. அதனால், கடலுார் தாசில்தார் அலுவலகத்தில் பல ஆண்டுகாலமாக பாதுகாத்து வைக்கப்பட்ட வேஸ்ட் பேப்பர்களை கடையில் விற்பனை செய்துவிடலாம் என துணை தாசில்தார் ஒருவர், தேர்தல் பிரிவில் பணியாற்றும் ஒரு ஊழியர் சேர்ந்து கடலுாரில் உள்ள ஒரு பழைய பேப்பர் கடையில் பேசி விற்பனை செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி வேஸ்ட் பேப்பர்கள் எல்லாம் 20 டன்னுக்கு மேல் பண்டல் செய்து சாக்கு மூட்டையில் போட்டுக்கொண்டிருந்தனர். இந்த விஷயம் தாசில்தார் காதுக்கு எட்ட, அதிர்ச்சி அடைந்த அவர், விரைந்து சென்று எப்படி என்னுடைய கவனத்திற்கு வராமல் பழைய பேப்பர்களை விற்பனை செய்ய முயற்சிக்கலாம் என கேட்டுள்ளனார். அதனால், பேப்பர் பண்டல் விற்பனை நிறுத்தப்பட்டு, அலுவலக பின்பக்க கட்டடத்தில் போட்டு வைக்கப்பட்டுள்ளது.