நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரத்தில், வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம், அம்மாபேட்டை, ஸ்ரீ அம்மன் நகரை சேர்ந்தவர் நாராயணன் மகன் பிரகாஷ்,23; குடும்ப சூழ்நிலை காரணமாக, நேற்று முன்தினம், வீட்டி யாரும் இல்லாத நேரத்தில், தோட்டத்தில் உள்ள கருவேல மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிதம்பரம், மாவட்ட மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

