/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய பஸ் நிலையம் எதிர்பார்த்த விருதை மக்களுக்கு 'கல்தா'
/
புதிய பஸ் நிலையம் எதிர்பார்த்த விருதை மக்களுக்கு 'கல்தா'
புதிய பஸ் நிலையம் எதிர்பார்த்த விருதை மக்களுக்கு 'கல்தா'
புதிய பஸ் நிலையம் எதிர்பார்த்த விருதை மக்களுக்கு 'கல்தா'
ADDED : மார் 26, 2025 05:34 AM
விருத்தாசலம் நகரின் பிரதான ஜங்ஷன் சாலையில், 25 ஆண்டுகளுக்கு முன் பஸ் நிலையம் கட்டப்பட்டது. அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப உருவான பஸ் நிலையத்தில் குடிநீர், கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தன்னிறைவாக நிறைவேற்ற இடவசதி இல்லை.
இதனால் புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என தொகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து மாஜி எம்.எல்.ஏ.,க்கள் விஜயகாந்த், முத்துக்குமார், கலைச்செல்வன் துவங்கி; சிட்டிங் காங்., எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் வரை சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், நேற்றைய நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கையிலும், விருத்தாசலத்திற்கு புதிய பஸ் நிலையம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. கும்பகோணம், அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்துார், செங்கல்பட்டு, திருக்கோவிலுார், திருச்செந்துாருக்கு புதிய பஸ் நிலையம் அமையும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் விருத்தாசலத்திற்கு புதிய பஸ் நிலையம் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்திருந்த தி.மு.க.,வினர் உட்பட பல்வேறு தரப்பினரும் அதிருப்தி அடைந்துள்ளனர். தனி மாவட்ட கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ள நிலையில், புதிதாக பஸ் நிலையம் குறித்த அறிவிப்பு கூட வரவில்லை.
25 ஆண்டுகால ஆட்சியில் தி.மு.க., - அ.தி.மு.க., என இருபெரும் கட்சிகளும் விருத்தாசலம் தொகுதியை புறக்கணிப்பது, வரும் சட்டசபை தேர்தலில் பிரதிபளிக்கும் எனவும், கூட்டணி கட்சியான காங்., என்பதால் உள்ளூர் அமைச்சரும் வலியுறுத்தவில்லை என, பொதுமக்கள் புலம்புகின்றனர்.