/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காட்சிப் பொருளான அவலம்
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காட்சிப் பொருளான அவலம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காட்சிப் பொருளான அவலம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காட்சிப் பொருளான அவலம்
ADDED : ஜூன் 27, 2025 12:17 AM

திட்டக்குடி: சிறுமுளை காலனியில் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வராத புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டக்குடி அடுத்த சிறுமுளை காலனியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 'உயிர் நீர் இயக்கம்' திட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடைய புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
பணி முழுமையாக நிறைவு பெற்றும், இதுவரை குழாய் இணைத்து, மக்களுக்கு குடிநீர் வினியோகம் துவங்கப்படாமல் இதுநாள் வரை மேல்நிலை தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாக உள்ளது.
எனவே, காட்சிப்பொருளான புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.