ADDED : மார் 26, 2025 05:27 AM
கடலுார் மாட்டத்தில் கம்யூ., கட்சிகளின் கடுமையான போராட்டங்களால் பத்மினி கொலை வழக்கு, நாவரசு கொலை வழக்கு, காவிரி நீர் திறப்பு போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்தது.
ஆனால், தற்போது மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை, நெல், கரும்பு உள்ளிட்ட விளை பொருட்களுக்கு விலையின்றி விவசாயிகள் பாதிப்பு, கடலுார் புதிய பஸ் நிலையம் பிரச்னை, வரி வசூல், தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளுக்கு தீர்வு, சுத்தமான குடிநீர் கிடைக்க செய்வது போன்ற பல பிரச்னைகள் உள்ளது.
சாதாரண பிரச்னைகளுக்கு கூட வீதிக்கு வந்து போராடும் குணம் கொண்ட கம்யூ., கட்சிகள், கடலுாரில் பிரச்னைகள் ஏராளமாக இருந்தும், அடக்கியே வாசிக்கின்றன.
அதே சமயத்தில், நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டிக்கொள்ள, கட்சியின் துணை அமைப்புகளாக குடியிருப்போர் நலச்சங்கம், மாணவர் சங்கம், நடைபாதை வியாபாரிகள் சங்கம், மாதர் சங்கம் என இவர்கள் மூலம், அரசுக்கு பெரிய அளவில் கோபத்தை ஏற்படுத்தாத வகையில், போராட்டத்தை நடத்தி வரும் நிலைதான் கடலுாரில் உள்ளது.
இதனால், பல ஆண்டுகளாக கம்யூ., கட்சிகள் போராட்டத்தின் மூலம் எதனையும் சாதிக்கவில்லை. ஆளும் தி.மு.க., வின் கூட்டணியில் அங்கம் வகிப்பதே அவர்களின் அடக்கி வாசிப்புக்கு காரணமாக உள்ளது.
ஆனாலும், அவர்களின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைதான் கேள்விக்குறி.