/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழிற்பயிற்சி கல்வியில் சேர்த்து படிக்க ... ஆர்வமில்லை; விண்ணப்பித்தோர் எண்ணிக்கை குறைவு
/
தொழிற்பயிற்சி கல்வியில் சேர்த்து படிக்க ... ஆர்வமில்லை; விண்ணப்பித்தோர் எண்ணிக்கை குறைவு
தொழிற்பயிற்சி கல்வியில் சேர்த்து படிக்க ... ஆர்வமில்லை; விண்ணப்பித்தோர் எண்ணிக்கை குறைவு
தொழிற்பயிற்சி கல்வியில் சேர்த்து படிக்க ... ஆர்வமில்லை; விண்ணப்பித்தோர் எண்ணிக்கை குறைவு
ADDED : ஜூன் 19, 2025 07:36 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் மாணவர்கள் இடையே தொழிற்பயிற்சி கல்வி படிக்கும் ஆர்வம் குறைந்துள்ளதால் மிக குறைந்த அளவே மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தொழிற்பயிற்சி கல்வி மூலம் மாணவர்களை வேலைக்கு தயார் படுத்துவதும், சுயதொழில் செய்வதற்கான பயிற்சியாக கருதப்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் ஒரு மகளிர் ஐ.டி.ஐ., உட்பட ஏழு அரசு ஐ.டி.ஐ.,க்கள், 18 தனியார் ஐ.டி.ஐ.,க்கள் உள்ளது. கடலுார் அரசு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை 724 உட்பட மாவட்டத்தில் உள்ள 7 அரசு ஐ.டி.ஐ.க்களில் மொத்தம் 2,350 மாணவர்கள் மற்றும் 18 தனியார் ஐ.டி.ஐ., மாணவர்கள் சேர்க்கைக்கு 5,000 அளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி கல்வி படிப்பில் சேர 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தகுதி உடையவர்களாக கருதப்படுகின்றனர்.
கடலுார் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த அரசு பொதுத் தேர்வில் பிளஸ் 2 வகுப்பில் 29,736 மாணவ, மாணவிகள், பத்தாம் வகுப்பில் 32,954 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் பிளஸ் 2 வகுப்பில் 28,316 பேரும், பத்தாம் வகுப்பில் 28,316 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு விதிகள் படி அனைத்து தொழில்நுட்ப படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடப்பது போன்று பொதுவாக விண்ணப்பிக்கும் முறைப்படி கடலுார் மாவட்டத்தில் இருந்து 833 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக தெரிய வருகிறது.
கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி கல்வி (ஐ.டி.ஐ) நிலையம் மாணவர்கள் சேர்க்கைக்கு வெறும் 833 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். மொத்த மாணவர்கள் சேர்க்கையில் ஐந்தில் ஒரு பங்கு மாணவர்கள் மட்டுமே ஐ.டி.ஐ., படிக்க விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் இடையே ஐ.டி.ஐ., படிக்க ஆர்வம் குறைந்து வருவதால், விண்ணப்பிக்கும் மாணவர்களும் குறைந்து வருகின்றனர்.
தற்போது ஏற்பட்டு வரும் கல்வியின் அபார வளர்ச்சியில் ஐ.டி.ஐ., படிப்பு பாடத்திட்டங்கள், தற்போது உள்ள வேலைகளுக்கு போட்டி போட முடியவில்லை. மேலும் கல்வித்துறையில் படித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஐ.டி.ஐ., படிப்பிற்கு என ஒதுக்கப்பட்ட வேலைகளும், கல்வி தகுதி அதிகம் உள்ளவர்கள் தட்டி பறித்துவிடுகின்றனர்.
அதனால் தொழிற்கல்வி ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்கள் இடையே ஆர்வம் குறைந்து வருகிறது. அதனால் தொழிற்பயிற்சி கல்வியில் முன்னோடி பாடத்திடங்களை கொண்டு வர வேண்டும். அரசு சார்பில் வளாக நேர்காணல் நடத்தி வேலை வாய்ப்புக்கான உறுதியை அரசு ஏற்படுத்தவேண்டும். அப்போது தான் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி கல்வியில் நம்பிக்கையும் ஆர்வமும் ஏற்படும்.