/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: ெஷம்போர்ட் பள்ளி முதலிடம்
/
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: ெஷம்போர்ட் பள்ளி முதலிடம்
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: ெஷம்போர்ட் பள்ளி முதலிடம்
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: ெஷம்போர்ட் பள்ளி முதலிடம்
ADDED : ஜன 23, 2024 10:27 PM
சிதம்பரம் : சென்னையில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் சிதம்பரம் ஷெம்போர்ட் பள்ளி மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்தனர்.
சென்னை டி.ஏ.வி. பள்ளிகள் மற்றும் இணைப்பு பள்ளிகளுக்கிடையே திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. இதில் சிதம்பரம் ஷெம்போர்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
நான்கு பிரிவுகளில் நடந்த போட்டியில் இப்பள்ளி 6ம் வகுப்பு மாணவி வர்ஷா, 1ம் வகுப்பு மாணவி அஸ்மா முதலிடமும், 8ம் வகுப்பு மாணவன் ரகுநந்தன் இரண்டாமிடமும் பிடித்தனர்.
சாதனை மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் சுரேஷ், முத்துலட்சுமி, இசை ஆசிரியர் கலையரசி ஆகியோரை பள்ளி கல்விக்குழு தலைவர் விசுவநாதன், முதல்வர் லதா பாராட்டினர்.