/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாரஸ் லாரியில் டிஸ்க், டயர் திருட்டு லாரி உரிமையாளர்கள் அச்சம்
/
டாரஸ் லாரியில் டிஸ்க், டயர் திருட்டு லாரி உரிமையாளர்கள் அச்சம்
டாரஸ் லாரியில் டிஸ்க், டயர் திருட்டு லாரி உரிமையாளர்கள் அச்சம்
டாரஸ் லாரியில் டிஸ்க், டயர் திருட்டு லாரி உரிமையாளர்கள் அச்சம்
ADDED : ஜன 19, 2024 08:09 AM

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டாரஸ் லாரியில் இருந்து டயர்களை திருடி சென்றர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லாரி, டிராக்டர் மற்றும் டாடா ஏஸ் வானங்களில் தொடர்ந்து பேட்டரி திருட்டு நடந்து வருகிறது. இதனால் வாகன உரியைாளர்கள் பலர் பாதிப்படைந்து வந்தனர். இது குறித்து புகார் அளித்து திருட்டு நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் சிதம்பரம் - சீர்காழி பைபாஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டாரஸ் லாரியில் இருந்து நள்ளிரவில், ஜாக்கி போட்டு, லாரியில் இருந்து 4 டயர் மற்றும் டிஸ்க்கை மர்ம நபர்கள் திருடி சென்றனர். காலையில் வந்து பார்த்த ஓட்டுனருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம், லாரி உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து லாரி உரியாளர் உதயம் கொடுத்த புகாரின் பேரில், சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார், கண்காணிப்பு கேமராவை சோதனை மேற்கொண்டு திருட்டு நபரை தேடி வருகின்றனர். இதே போல், கடந்த மாதம் புதுச்சத்திரம் காவல் சரகத்தில், லாரியில் இருந்து டயரை, கழட்டி திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

