ADDED : செப் 24, 2025 08:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : விருத்தாசலத்தில் வி.சி., கட்சி மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் பிறந்த நாள் விழா நடந்தது.
விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மண்டல துணை செயலாளர் ஐயாயிரம் வரவேற்றார்.
கடலுார் மைய மாவட்ட செயலாளர் நீதிவள்ளல், தனது பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி, நகர பொருளாளர் தனசேகர், வழக்கறிஞர் தனராஜ், ஒன்றிய பொருளாளர் சக்திவேல், எழில்வான் சிறப்பு, துணைச் செயலாளர் தென்றல், நிர்வாகிகள் அய்யாதுரை, வீரமணி, சதீஷ், ராகுல், ரமணா, பாபுஜி, துரைமுருகன் உடனிருந்தனர்.
முன்னதாக, நிர்வாகிகள் சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர்.