/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்
/
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்
ADDED : அக் 24, 2025 03:11 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில், விழுப்புரம் சரக போதைப்பொருள் ஒழிப்புக்குழுவினரால் போதைப் பொருள் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 30ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து கடலுார் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு டி.எஸ்.பி., விடுத்துள்ள செய்திக் குறிப்பு.
கடலுார் மாவட்டத்தில், விழுப்புரம் சரக போதைப்பொருள் ஒழிப்புக்குழுவினரால் போதைப்பொருள் குற்ற வழக்குகளில் ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் 26 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அந்த வாகனங்கள், வரும் 30ம் தேதி ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.
ஏலத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 30ம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை வாகனங்களை பார்வையிடலாம்.
பின் ஏல முன்பணமாக இருசக்கர வாகனங்களுக்கு 5ஆயிரம் ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 10ஆயிரம் ரூபாயும், கடலுார் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தில் செலுத்தி காலை 11மணிக்கு நடக்கும் ஏலத்தில் பங்கேற்கலாம்.
அரசு நிர்ணயித்த மதிப்பீட்டு தொகைக்கு, அதிகபட்சமாக ஏலம் கோருவோருக்கு வாகனங்கள் ஒதுக்கப்படும்.
மேலும் பொது ஏலத்தில் எடுத்த வாகனங்களுக்கு அதற்குண்டான ஜி.எஸ்.டி., சேர்த்து வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

