ADDED : மே 10, 2025 12:15 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் வி.இ.டி., மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.
விருத்தாசலம் வி.இ.டி., மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுதிய 168 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீதம் தேர்ச்சிபெற்றனர்.
மாணவர்கள் அன்பரசன் 590 மதிப்பெண் பெற்று முதலிடம், அரவிந்த்குமார் 583 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், , தீனதயாளன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலா 581 மதிப்பெண் மூன்றாமிடம் பிடித்தனர்.
தேர்வு எழுதிய 168 மாணவர்களில் 96 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்தனர். மாணவர் அன்பரசன் கணிதம், இயற்பியலிலும், மாணவர் அருள் கணிதம் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றனர்.
தமிழ் பாடத்தில் 9 மாணவர்கள் 99 மதிப்பெண், ஆங்கிலத்தில் 7 பேர் 98, வேதியியலில் 2 பேர் 98, கணினி அறிவியல், உயிரியல் பாடங்களில் தலா ஒரு மாணவர்கள் 99 மதிப்பெண் பெற்றனர்.
கல்விக்குழும தலைவர் பத்மாவதி சக்திவேல், செயலாளர் இந்திரா வீரராகவன், பொருளாளர் கீர்த்திகா ராஜகோபால், தலைமை ஆசிரியர் பிரபாகரன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து, வாழ்த்துதெரிவித்தனர்.