/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை
/
காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை
ADDED : ஜன 23, 2024 05:06 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே காட்டு பன்றிகள், அறுவடைக்கு தயாராக உள்ள நெல் வயல்களை நாசம் செய்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கிராம விவசாயிகள் 500 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது, நெற்கதிர்கள் முற்றி, அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் மணவாளநல்லுார் பகுதியில் மணிமுத்தாற்றின் கரையோரம் உள்ள நெல் வயல்களில் காட்டு பன்றிகள் நுழைந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இதனால் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். மேலும், காட்டுப் பன்றிகளை விரட்ட, விவசாயிகள் நிலத்தை சுற்றியும் கம்பி அமைத்தும், அதனை மீறி காட்டுப்பன்றிகள் நெல் வயல்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், காட்டு பன்றிகளின் அட்டகாசத்தால், பயிர்கள் முற்றிலும் நாசமடைந்துள்ளன. இதனால், மகசூல் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எங்கள் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு பன்றிகளை வனத்துறை அதிகாரிகள் பிடித்து, காப்புகாட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

