/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் அகற்றப்படுமா?.
/
மாவட்டத்தில் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் அகற்றப்படுமா?.
மாவட்டத்தில் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் அகற்றப்படுமா?.
மாவட்டத்தில் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் அகற்றப்படுமா?.
ADDED : ஜன 19, 2024 08:18 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை அகற்றுவதற்குவட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் தற்போது மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
நான்கு சக்கர வாகனங்களின் முன், பின் ஏதாவது மோதினால், அந்த அதிர்வை உணர்ந்து, இருக்கைகளின் கீழுள்ள காற்றுப்பைகள் விரியும் தொழில்நுட்பத்தில் வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால், விபத்தில் சிக்கும் வாகனங்களின் உள்ளே இருப்பவர்களின் உயிர் காக்கப்படும்.
ஆனால், வாகன உரிமையாளர்கள் சிலர், வாகனங்களில் கூடுதலாக தங்களின் வசதிக்காக பம்பர்களை பொருத்துகின்றனர். வாகனங்களில் பம்பர்கள் பொருத்துவதால், வாகனம் இடிபடும் அதிர்வு சரியாக காற்றுப்பைகளுக்கு கிடைப்பதில்லை. இதனால், விபத்தில் சிக்கும் வாகனத்தில் பயணிப்போரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் பம்பர்களும் முக்கிய காரணமாக உள்ளது.
மேலும், அரசு மற்றும் தனியார் நான்கு சக்கர வாகனங்களின் முகப்பில் பொருத்தப்பட்டுள்ள பம்பர் கம்பிகளால், பாதசாரிகள் மற்றும் வாகனத்தில் செல்பவர்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. எனவே, கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்களை பொருத்தக் கூடாது என மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2017ல் உத்தரவிட்டது.
இதையடுத்து, பம்பர்களை அகற்ற ஐகோர்ட் மற்றும் தமிழக அரசு, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதன்படி, அரசு மற்றும் தனியார் கார்களில் இருந்த பம்பர்கள் அகற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் வாகனங்களில் பம்பர்கள் அகற்றும் உத்தரவை அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.
சாலையில் செல்லும் பம்பர் பொருத்திய வாகனங்களை போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இதனால், மாவட்டத்தில் தற்போது கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களில் பம்பர்கள் பொருத்துவது அதிகரித்து வருகின்றது. மேலும், நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் பம்பர்களை விட, அதீக ஒளியைப் பரப்பும் விளக்குகளாலும், அதிகளவில் விபத்துகள் நடக்கின்றன.
எனவே, மாவட்டத்தில் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்களை அகற்றவும், அதிக ஒளியை பரப்பும் விளக்குகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

