ADDED : ஜன 19, 2024 08:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே குளத்தில் மீன் பிடிக்கும்போது தண்ணீரில் மூழ்கி மீன் பிடி தொழிலாளி இறந்தார்.
பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசுபதி, 53; மீன்பிடி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள குளத்தில் மீன் பிடிக்கும்போது நீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் நேற்று அசுபதியின் உடல் குளத்தின் கரையோரம் ஒதுங்கியது.
இதுகுறித்து, பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.

