/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
திருப்பூர் மாவட்ட பா.ஜ.,வில் கோஷ்டிபூசல் உச்சக்கட்டம்காங்கேயத்தில் நடந்தது அதிருப்தி நிர்வாகிகள் கூட்டம்

ADDED : மார் 25, 2025 12:48 AM
திருப்பூர் மாவட்ட பா.ஜ.,வில் கோஷ்டிபூசல் உச்சக்கட்டம்காங்கேயத்தில் நடந்தது அதிருப்தி நிர்வாகிகள் கூட்டம்
காங்கேயம்:திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.,வில் கோஷ்டிபூசல் உச்சக்கட்டம் அடைந்துள்ள நிலையில், மாவட்ட, மாநில நிர்வாகிகளை புறக்கணித்து நடந்த கூட்டம், பிற நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
திருப்பூர் மாவட்ட பா.ஜ.,வில் முதன்மை அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, பட்டியல் அணி உள்ளிட்ட ஐந்து அணிகளும், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு, ஆன்மிக மேம்பாட்டு பிரிவு, பிரசார பிரிவு என, 20க்கும் மேற்பட்ட பிரிவுகளும் உள்ளன. இவற்றில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் நிர்வாகிகளாக உள்ளனர். தற்போது மாவட்ட தலைவர்கள், ஒரு சில மண்டல தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் தெற்கு தலைவராக மோகனபிரியா நியமிக்கப்பட்டார். இவர் தனக்கு வேண்டியவர்களை மண்டல தலைவர்களாக நியமித்துள்ளதாக தெரிகிறது.
இதை ஏற்காத சீனியர் நிர்வாகிகள், புதிய தலைவருக்கு எதிராகவும், அவரை பரிந்துரை செய்த மாநில நிர்வாகிகளுக்கு எதிராகவும் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
இதனால் மோகனபிரியா ஒரு அணியாகவும், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சங்கரகோபால் தலைமையில் ஒரு அணியாகவும், மாவட்ட இளைஞரணி தலைவர் விசாகன் தலைமையில் ஒரு அணி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் ருத்ரகுமார் மற்றும் மங்களம் ரவி தலைமையில் இரு அணி என ஐந்து கோஷ்டிகளாக உள்ளனர்.
இதில் மோகனபிரியா தலைமையில் நடக்கும் நிகழ்ச்சிகளை, ஆரம்பம் முதலே மற்ற கோஷ்டியினர் புறக்கணித்து வந்தனர்.
இந்நிலையில் காங்கேயத்தில், பா.ஜ., உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் சங்கரகோபால் ஏற்பாட்டில், மண்டல தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், அணி பிரிவு தலைவர்கள், மகளிர் அணி உள்ளிட்ட நிர்வாகிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், மாவட்ட, மாநில நிர்வாகிகளை புறக்கணித்து விட்டு கூட்டம் நடத்தியுள்ளனர். இதில் முன்னாள் மாவட்ட துணை தலைவர் துரைசாமி, இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு அணி நந்தகுமார் முன்னிலை வகித்துள்ளனர்.
தனியாக உறுப்பினர்களை சேர்த்துவது, கட்சி நிகழ்ச்சிகளை தனியாக நடத்துவது, அதன் அறிக்கைகளை தேசிய தலைமைக்கு அனுப்பி வைப்பது என கூட்டத்தில் ஆலோசித்துள்ளனர்.
மாவட்ட தலைவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தெற்கு மாவட்ட பா.ஜ., வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.