/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் நாளை அரசு போட்டி தேர்வுகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
/
தர்மபுரியில் நாளை அரசு போட்டி தேர்வுகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
தர்மபுரியில் நாளை அரசு போட்டி தேர்வுகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
தர்மபுரியில் நாளை அரசு போட்டி தேர்வுகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ADDED : மார் 27, 2025 01:27 AM
தர்மபுரியில் நாளை அரசு போட்டி தேர்வுகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
தர்மபுரி:-தர்மபுரியில், ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் சார்பில் செயல்பட்டு வரும், விஜய் டி.என்.பி.எஸ்.சி., அகாடமி சார்பில், அரசு போட்டி தேர்வுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி தர்மபுரி சோகத்துாரிலுள்ள தி விஜய் மில்லினியம் சீனியர் செகண்டரி பள்ளி வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை, 9:30 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சிக்கு, விஜய்
வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி.,இளங்கோவன் தலைமை வகிக்கிறார். ஐ.ஏ.எஸ்., அதிகாரி டாக்டர் மகேஸ்வரன் விருப்ப பாடத்தை தேர்வு செய்வது எப்படி. நேர்முகத் தேர்வில் சாதிப்பது எப்படி. முதல் நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் சாதிப்பது எப்படி. தேர்வில் வெற்றி பெற திட்டமிடுவது
எப்படி, என்பது குறித்து விளக்கி, தேர்வாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்.இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும், டி.என்.பி.எஸ்.சி., அனைத்து தேர்வு பாடத்திட்ட கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம், எனவே, அரசு போட்டித்தேர்வு எழுதும் தேர்வாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள, நிகழ்ச்சி
ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.