/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் குறித்த விழிப்புணர்வு
/
டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் குறித்த விழிப்புணர்வு
டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் குறித்த விழிப்புணர்வு
டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் குறித்த விழிப்புணர்வு
ADDED : மார் 26, 2025 02:05 AM
டவுன் போலீஸ் ஸ்டேஷனில்
சட்டம் குறித்த விழிப்புணர்வு
தர்மபுரி:
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று சட்டங்கள் குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நடந்தது.
இதில், பி.என்.எஸ்., பி.என்.எஸ்.எஸ்., பி.எஸ்.ஏ., உள்ளிட்ட, 3 சட்டங்கள் குறித்தும், அதில் முன்னெடுக்கப்படும் சட்ட வழிமுறை குறித்தும், இன்ஸ்பெக்டர் வேலுதேவன் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார். அதேபோல், நகர பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுப்பது மற்றும் அது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினார். மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று சட்டங்களின் மூலம், வழக்கு பதிவதற்கான வழிமுறைகள் மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபருக்கு கிடைக்கும், அதிகபட்ச தண்டனை குறித்தும், விரிவாக எடுத்துரைத்தார்.