/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கொக்கராப்பட்டி வாரச்சந்தை ஏலம் 2வது முறை ஒத்திவைப்பு
/
கொக்கராப்பட்டி வாரச்சந்தை ஏலம் 2வது முறை ஒத்திவைப்பு
கொக்கராப்பட்டி வாரச்சந்தை ஏலம் 2வது முறை ஒத்திவைப்பு
கொக்கராப்பட்டி வாரச்சந்தை ஏலம் 2வது முறை ஒத்திவைப்பு
ADDED : மார் 26, 2025 02:06 AM
கொக்கராப்பட்டி வாரச்சந்தை ஏலம் 2வது முறை ஒத்திவைப்பு
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொக்கராப்பட்டி பஞ்., புழுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமையில் சந்தை நடக்கிறது. இங்கு, 2025-26ம் ஆண்டிற்கான நுழைவுக்கட்டணம் வசூல் செய்வதற்கான குத்தகை ஏலத்தொகையாக, கடந்தாண்டு ஏலம் போன தொகையான, 12 லட்சம் ரூபாய் மற்றும், 10 சதவீத கூடுதல் தொகை, ஜி.எஸ்.டி., என மொத்தம், 16.25 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த, 12ல் அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏலம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் யாரும் அரசு நிர்ணயித்த தொகைக்கு ஏலம் கேட்கவில்லை.
இதையடுத்து, ஏலம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நேற்று நடந்தது. இதில், 20 பேர் பங்கேற்ற நிலையில், அரசு நிர்ணயித்த தொகைக்கு ஏலம் கேட்கவில்லை. எனவே, நேற்றைய ஏலமும் மறு தேதி குறிப்பிடப்படாமல், ஒத்திவைக்கப்படுவதாக, அறிவிப்பு வெளியிடப்பட்டது.