ADDED : மார் 26, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொம்மிடியில் ரவுடி கைது
பாப்பிரெட்டிப்பட்டி:--பொம்மிடி வினோபாஜி தெருவை சேர்ந்தவர் சச்சின் குமார், 26. இவர் மீது பொம்மிடி போலீசில் குற்ற வழக்கு உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளி. நேற்று மதியம் வடசெந்தியூர் டாஸ்மாக் முன், கையில் கல்லை எடுத்துக் கொண்டு அவ்வழியாக வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது எறியும் நோக்கில் அச்சுறுத்தியும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியும் வந்தார். அவரை பொம்மிடி போலீசார் கைது செய்தனர்.