/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் அருகே கள்ளக்காதல் தகராறு கத்தியால் குத்தி பெண் கொலை
/
அரூர் அருகே கள்ளக்காதல் தகராறு கத்தியால் குத்தி பெண் கொலை
அரூர் அருகே கள்ளக்காதல் தகராறு கத்தியால் குத்தி பெண் கொலை
அரூர் அருகே கள்ளக்காதல் தகராறு கத்தியால் குத்தி பெண் கொலை
ADDED : ஜன 23, 2024 10:12 AM
அரூர்: அரூர் அருகே, கள்ளக்காதல் தகராறில் பெண்ணை கொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சித்தேரி மலை பஞ்.,க்கு உட்பட்ட தேக்கல்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம், 44, கட்டட மேஸ்திரி; இவருக்கு ஜெயமணி, 38, மற்றும் செல்வி என இரு மனைவியர். முதல் மனைவியான ஜெயமணிக்கும், ராஜாராமின் பெரியம்மா மகன் பாறைவளவை சேர்ந்த விவசாயி மனோகரன், 46, என்பவருக்கும் கடந்த, 4 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் ஜெயமணியின் மகள் கிரேசி என்பவருக்கு வளைகாப்பு நடந்தது. அங்கு மனைவியுடன் வந்த மனோகரன் சாப்பிடாமல் சென்றுள்ளார். இது குறித்து, அவரிடம் ராஜாராம் கேட்டபோது, 'உன் மனைவி ஜெயமணி பலருடன் தொடர்பு வைத்துள்ளாள். நீ அவளை கண்டிக்க மாட்டாயா, எனக்கு சாப்பாடு வேண்டாம்' என கூறிச்சென்றுள்ளார்.
இந்நிலையில், அன்று மாலை, 5:30 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்ற ஜெயமணி நீண்ட நேரமாகியும் திரும்பாததால், ராஜாராம் அவரை தேடி சென்றார். அப்போது, வனச்சாலை பெரியமேடு அருகே, ஜெயமணியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த மனோகரன், கத்தியால் கழுத்து உள்ளிட்ட இடங்களில் குத்தியதில் ஜெயமணி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்த ரா
ஜாராம் மற்றும் அவரது மருமகன் கதிர்வேல் சத்தம் போட்டதால், மனோகரன் அங்கிருந்து பைக்கில் தப்பினார். ராஜாராம் புகார்படி, அரூர் போலீசார் மனோகரனை நேற்று கைது செய்தனர்.

