/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வீட்டில் தனியாக வசித்த பெண் வெட்டிக்கொலை
/
வீட்டில் தனியாக வசித்த பெண் வெட்டிக்கொலை
ADDED : ஜன 14, 2024 12:48 AM
பென்னாகரம்:தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் இந்திரா நகரை சேர்ந்தவர் சுமதி 45; இவர் தன் கணவர் குணசேகரனை பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். பென்னாகரம் அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவில் தற்காலிக கிராமப்புற உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவருடைய 2 மகன்கள் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று காலை 10:00 மணியாகியும் அவர் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர்.
கதவு திறந்திருந்த நிலையில் உள்ளே கைகள் கட்டப்பட்டு தலையின் பின்பக்கத்தில் படுகாயமடைந்த நிலையிலும் உடலில் வெட்டு காயங்களோடும் மர்மமான முறையில் சுமதி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். நேற்று முன்தினம் இரவு இக்கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என பென்னாகரம் போலீசார் சந்தேகிக்கின்றனர். தடயவியல் துறையினர், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் டி.எஸ்.பி. மகாலட்சுமி இன்ஸ்பெக்டர்கள் முத்தமிழ் செல்வன் சுரேஷ்குமார் குமரவேல் விசாரணை நடத்தினர். பென்னாகரம் போலீசார் ஆறு தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

