/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொப்பூரில் லாரி மோதி டிரைவர் சாவு
/
தொப்பூரில் லாரி மோதி டிரைவர் சாவு
ADDED : ஜூன் 25, 2025 01:48 AM
தொப்பூர், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து, கேரள மாநிலம் கொச்சிக்கு, பேப்பர் லோடு ஏற்றிய லாரியை திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த சேகர், 56, என்பவர் ஓட்டி வந்தார். லாரி தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் வழியாக, நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியின், பின் பக்கம் மோதி
விபத்துக்குள்ளானது.
இதில், படுகாயமடைந்த பேப்பர் லோடு லாரி டிரைவர் சேகரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்தார். இந்த விபத்து நடந்த சிறிது நேரத்தில், அதன் இடத்தின் அருகில், பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி, வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற ஆம்னி பஸ்சின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் மற்றும் டிரைவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த இரு விபத்துகளால், தர்மபுரி- -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், 3:00 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர், போலீசார் மற்றும் பாளையம் சுங்கச்சாவடி ரோந்து குழுவினர் ஒருங்கிணைந்து, விபத்துக்குள்ளான மூன்று லாரிகள் மற்றும் ஆம்னி பஸ்சை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். தொப்பூர் போலீசார்
விசாரிக்கின்றனர்.