/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் காய்ச்சல் அதிகரிப்புகுவியும் நோயாளிகள்
/
அரூரில் காய்ச்சல் அதிகரிப்புகுவியும் நோயாளிகள்
ADDED : ஜன 08, 2025 02:58 AM
அரூரில் காய்ச்சல் அதிகரிப்புகுவியும் நோயாளிகள்
அரூர்,:தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில், சமீபத்தில் பெய்த கன
மழையால் தடுப்பணைகள், ஏரி, குளம் மற்றும் விவசாய கிணறுகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக, பகலில் வெயிலும், இரவு நேரங்களில் அடர் மூடுபனி காரணமாக குளிர் காற்று வீசுகிறது.
இந்த பருவ நிலைமாற்றத்தால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வேகமாக காய்ச்சல் பரவி வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள், அரூரில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குவிந்து
வருகின்றனர்.

