/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல் சுங்க கட்டணம் ரூ.2.32 கோடிக்கு ஏலம்
/
ஒகேனக்கல் சுங்க கட்டணம் ரூ.2.32 கோடிக்கு ஏலம்
ADDED : ஜூலை 04, 2025 01:35 AM
பென்னாகரம், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பைக், கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
ஒகேனக்கல்லுக்கு வாகனங்களில் சுற்றுலா வரும் பயணிகளிடம், ஒகேனக்கல் அருகே உள்ள மடம் மற்றும் ஒகேனக்கல்லில் சுங்க கட்டணம் மற்றும் நிறுத்தும் இடம் கட்டணம் சேர்த்து, வசூல் செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதையடுத்து, பென்னாகரம் பி.டி.ஓ., ஆபீசில் நேற்று, இதற்கான மறு ஏலம் நடந்தது. நுழைவு கட்டண வசூல் ஏலத்திற்கான, 10 லட்சம் ரூபாய் முன்வைப்பு தொகை நிர்ணயிக்கப்பட்டது. ஏலத்தில், 43 ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.
சுங்க கட்டணம், 1.95 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. கடந்தாண்டு, 1.25 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட நிலையில் இந்தாண்டு, 1.95 கோடி ரூபாய்ககு ஏலம் கோரப்பட்டது.
இதன் மூலம் அரசுக்கு, 60 லட்ச ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது. வாகன கட்டண நிர்ணயத்தில் எவ்வித மாற்றமும் இன்றி, பழைய கட்டணமே வசூலிக்கப்படும் எனவும், இந்தாண்டு ஏலத்தொகையும், ஜி.எஸ்.டி., என மொத்தம், 2.32 கோடி ரூபாய்க்கு, தனியாருக்கு ஒப்பந்த ஏலம் விடப்பட்டதாக, பி.டி.ஓ.,க்கள் தெரிவித்தனர்.