/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இந்திய விமான படையின் 'அக்னிவீர்' ஆட்சேர்ப்பு தேர்வு
/
இந்திய விமான படையின் 'அக்னிவீர்' ஆட்சேர்ப்பு தேர்வு
இந்திய விமான படையின் 'அக்னிவீர்' ஆட்சேர்ப்பு தேர்வு
இந்திய விமான படையின் 'அக்னிவீர்' ஆட்சேர்ப்பு தேர்வு
ADDED : ஜன 21, 2024 12:21 PM
தர்மபுரி: இந்திய விமானப் படையின், அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தில் நடக்கவுள்ள, ஆட்சேர்ப்பு தேர்விற்கு, தர்மபுரி மாவட்ட இளைஞர்கள், இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:
இந்திய விமான படையின், அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தில் ஆட்சேர்ப்பு தேர்வு மார்ச்., 17 அன்று நடக்கவுள்ளது. இத்தேர்விற்கு இணையவழியில் ஜன., 17 முதல் பிப்., 6- வரை விண்ணப்பிக்கலாம். அக்னிவீர் வாயு தேர்வுக்கு, திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இதற்கு, பிளஸ் 2 வில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், ஆட்டோமோட்டிவ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம், 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆர்வமுள்ள இளைஞர்கள், https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், தகவல்களுக்கு, தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண், 04342- - 296188 மூலம் தொடர்பு கொண்டு அறியலாம். அல்லது, https://t.ly/AgZXK என்ற இணையதள படிவத்தில் தங்களது விபரங்களை பதிவு செய்யலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

