ADDED : ஜன 24, 2024 10:32 AM
தர்மபுரி: தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி, தர்மபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி தர்மபுரி அரசு கலைக் கல்லுாரியில், சட்ட சேவைகள் குறித்த புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து மாணவர்களிடையே பேசினார்.
முன்னதாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் சுரேஷ் அனைத்து நீதிபதிகள், பேராசிரியர்கள் மாணவ, மாணவியரை வரவேற்றார். தொடர்ந்து, முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி தலைமை வகித்து பேசுகையில், மாவட்ட சட்டப்
பணிகள் ஆணைக்குழு குறித்தும் ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் இலவச சட்டப்பணிகள் குழு செயல்படுவது, இலவச சட்ட ஆலோசனை, சமரச மையம், மக்கள் நீதிமன்றம், இலவச சட்ட உதவிகள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு முகாம்கள், இலவச சட்ட உதவி பெறுவதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகள் பற்றி, மாணவ, மாணவியருக்கு எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, போக்சோ நீதிபதி சையத் பார்கத்துல்லா, குடும்ப நல நீதிபதி விஜயகுமாரி, சிறப்பு மாவட்ட நீதிபதி ராஜா, முதன்மை சார்பு நீதிபதி சிவக்குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தரராஜன், கூடுதல் மகிளா குற்றவியல் நீதிபதி மதுவர்சினி, நீதிமன்ற பணியாளர்கள், பேராசிரியர்கள் சட்ட எதிர்காப்பு முறைமை வக்கீல்கள் கலந்து கொண்டனர். நிறைவாக, அரசு கலைக்கல்லுாரி இணை பேராசிரியர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

