/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சர்க்கரை ஆலையில் லாரி ஓனர்கள் போராட்டம்
/
சர்க்கரை ஆலையில் லாரி ஓனர்கள் போராட்டம்
ADDED : ஜன 23, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, திம்மம்பட்டியில், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்குகிறது. ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு தங்களுடைய சொந்த டிராக்டரிலும் கரும்பை ஏற்றி வர அனுமதி அளித்துள்ளது.
விவசாய பயன்பாட்டிற்கு உள்ள டிராக்டர்களை, வணிக நோக்கில் கரும்புகளை ஏற்றி வர, ஆலை நிர்வாகம் விதிமுறை மீறி அனுமதி வழங்கியதை கண்டித்து, லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரும்பு லோடு ஏற்றி வராமல் கடந்த, நான்கு நாட்களாக ஆலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, ஆலை வளாகத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.

