/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊரக பகுதி ஹெச்.எம்.,களுக்கான கூட்டம்
/
ஊரக பகுதி ஹெச்.எம்.,களுக்கான கூட்டம்
ADDED : ஜன 08, 2025 02:59 AM
ஊரக பகுதி ஹெச்.எம்.,களுக்கான கூட்டம்
தர்மபுரி, :தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, மலை மற்றும் ஊரகப் பகுதியில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆன்லைன் ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார்.
இதில், அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த, 73 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். இவர்
களுக்கு, கடந்தாண்டு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள், இந்தாண்டு மாணவர்களுக்கு உரிய சிறப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும். மேலும், மாணவர்களுக்கு தேவையான மாதிரி வினாத்தாள் தயாரித்து அவர்களுக்கு தேர்வுகள் நடத்தி, இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதில், சி.இ.ஓ., ஜோதிசந்திரா, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித் திட்ட அலுவலர்
மஞ்சுளா உள்பட பலர் பங்கேற்றனர்.

