ADDED : செப் 26, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி :தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் பாளையம் சுங்கச்சாவடி நிறுவனம் சார்பில், பள்ளி மாணவர்கள், தங்கள் தாயின் பெயரில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. தொப்பூர் அடுத்த வெள்ளக்கல் சமத்துவபுரம் வனப்பகுதியில் நடந்த விழாவில், குறிஞ்சிநகர் வள்ளலார்
பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர் தங்கள் தாயின் பெயரில் பூவரசன், வேம்பு, நாவல், அரசன் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
இதில், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் சீனிவாசலு, குழு தலைவர் ரவி, சுங்கசாவடி திட்ட தலைவர் நரேஷ், நல்லம்பள்ளி தாசில்தார் பிரசன்ன மூர்த்தி, தொப்பூர் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் தொப்பூர் வனவர் கங்கை அமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.