/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிடப்பிலுள்ள இணை மின்நிலையம் பணியை மீண்டும் துவங்க கோரிக்கை
/
கிடப்பிலுள்ள இணை மின்நிலையம் பணியை மீண்டும் துவங்க கோரிக்கை
கிடப்பிலுள்ள இணை மின்நிலையம் பணியை மீண்டும் துவங்க கோரிக்கை
கிடப்பிலுள்ள இணை மின்நிலையம் பணியை மீண்டும் துவங்க கோரிக்கை
ADDED : பிப் 02, 2024 10:47 AM
அரூர்: தி.மு.க., தேர்தல் வாக்குறுதி படி, இணை மின்நிலையம் அமைக்கும் பணியை மீண்டும் துவங்க, கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரம், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இணை மின்நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. அதை மீண்டும் துவங்கக்கோரி, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
இணை மின்நிலையம், 90 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க முடிவானது. இதில், விவசாயிகளின் பங்களிப்பாக, 10 சதவீத தொகையான, 9 கோடி ரூபாய் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. ஆலையில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கத்தினர்களாக உள்ள நிலையில் கடந்த, 2007-08ல், ஆலைக்கு கரும்பு அனுப்பிய, 7,182 விவசாயிகளிடம் இருந்து, டன் ஒன்றுக்கு, 90 ரூபாய் வீதம் என, 4.02 கோடி ரூபாய் பெறப்பட்டது.
கடந்த, 2009 - 10ல், தி.மு.க., ஆட்சியில் இணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கி, 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், ஆட்சி மாற்றத்தால், அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. 2016ல், ஏற்பட்ட தீ விபத்தில், 5 கோடி ரூபாய் மதிப்பிலான கேபிள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாகின. இணை மின்நிலையம் அமைக்கும் பணியை தொடரக்கோரி, சர்க்கரை துறை ஆணையர், கலெக்டர் மற்றும் பேரவைக்கூட்டத்தில் வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், இணைமின் நிலையம் அமைக்கும் பணிக்காக, பிடித்தம் செய்த தொகையை திரும்ப வழங்க கோரிக்கை விடுத்தும், இதுவரை விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படவில்லை.
கடந்த, 2021ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மீண்டும் இணைமின் நிலையம் அமைக்கும் பணி துவங்கப்படும் என, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால், இதுவரை பணிகள் துவங்கப்படவில்லை. எனவே, இணை மின்
நிலையம் அமைக்கும் பணியை மீண்டும் துவங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

