/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.14.66 லட்சம் திருட்டு ஜவுளி கடையில் கைவரிசை
/
ரூ.14.66 லட்சம் திருட்டு ஜவுளி கடையில் கைவரிசை
ADDED : ஜன 19, 2024 01:58 AM
தர்மபுரி:தர்மபுரி, நேதாஜி பை-பாஸ் சாலையிலுள்ள பிரபல ஜவுளி கடையில் பொங்கல் பண்டிகையொட்டி அதிகளவில் வியாபாரம் நடந்தது. இக்கடையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை சேர்ந்த ரியாஷ் அகமது, 39, என்பவர் மேலாளராக பணிபுரிகிறார். இவர் கடந்த 16ம் தேதியன்று, பொங்கல் பண்டிகையில் கடையில் வசூலான, 14.66 லட்சம் ரூபாயை, கடையின் கல்லா பெட்டியில் வைத்து விட்டு, வழக்கம்போல கடையை பூட்டி சென்றார்.
நேற்று முன்தினம் காலை அவர் கடையை திறந்தபோது, கடையின் கூரை உடைக்கப்பட்டு, உள்ளே கல்லாவில் வைத்திருந்த பணம் திருடப்பட்டிருந்தது. தர்மபுரி டவுன் போலீசில் அவர் புகார் அளித்தார். 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்தனர். பழைய குற்றவாளிகள் குறித்து விசாரிக்கின்றனர்.

