/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாநில சிலம்பம் போட்டி பள்ளி மாணவர் வெற்றி
/
மாநில சிலம்பம் போட்டி பள்ளி மாணவர் வெற்றி
ADDED : ஜூன் 25, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், தர்மபுரியில், அமெச்சூர் அசோசியேசன் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில், ஜூனியர் பிரிவில், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 9ம் வகுப்பு மாணவர் சுமன் வெற்றி பெற்று, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவரையும், அவருக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, சங்கர், முருகேசன், சுரேஷ் ஆகியோரை பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.