ADDED : செப் 19, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம், பென்னாகரம் அடுத்த நாகரசம்பட்டியில், பிளியனுார், தித்தியோப்பன அள்ளி, நாகரசம்பட்டி உள்ளிட்ட மூன்று பஞ்சாயத்துக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் நேற்று நடைபெற்றது.
இதில் வருவாய், மருத்துவம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, மின்சாரம் உள்ளிட்ட 15 துறைகளின் கீழ், 46 சேவைகளுக்கு மனுக்கள் பெறப்பட்டன. 1,000க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர். முகாமை பென்னாகரம் எம்.எல்.ஏ., ஜி.கே. மணி பார்வையிட்டார். முகாமில், பென்னாகரம் தாசில்தார் சண்முகசுந்தரம், பி.டி.ஓ.,க்கள் சக்திவேல், லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

